உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையம்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது.இதில் திமுக அமோகமாக வெற்றி பெற்றது.இந்நிலையில் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மற்ற  இருபத்தி எட்டு மாவட்டங்களில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தலில் செலவிட்ட தொகைக்கான கணக்கை உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும்என்றும் அந்த கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் செலவு கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.வருங்காலங்களில் மூன்றாண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர் என அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்