இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை வழங்கியுள்ள மக்களாகிய உங்களுக்கு தொண்டாற்றுவதே நாங்கள் காட்டும் நன்றியாகும். ஓய்வின்றி உழைத்திட்ட உடன்பிறப்புகளுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி களத்தில் வெற்றி பெற்ற திமுக, விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் வென்றிட வேண்டும். மக்கள் நம் பக்கம். நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நமது செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும். இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்" என கூறியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்