தேவர் குருபூஜை: ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிக்கு தடை

தேவர் குருபூஜை: ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிக்கு தடை: ராமநாதபுர ஆட்சியர்..!

கொரோனா சூழலில் பொதுமக்களின் நலன் கருதி வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கமுதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

* ராமநாதபுர மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளதால் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது. 

* வாடகை வாகனங்களில் வர தடை

* ஒலிபெருக்கி வைத்தல், வெடி போடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வருதல் மற்றும் ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை

* மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் மரியாதை செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல  வேண்டும். 

* உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை

.

Find Us Hereஇங்கே தேடவும்