தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்