முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் எம்.பி ரமேஷ்க்கு ஒரு நாள் காவல்.!

முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் எம்.பி ரமேஷ்க்கு ஒரு நாள் காவல்.!

கடலூர் திமுக எம்.பி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 19ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து நடைபெற்ற பிரேதபரிசோதனையில் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகி சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் திமுக எம்.பி தொடர்பு உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், முந்திரி தொழிற்சாலையில் திருடுபோனதாகவும், அப்போது அது குறித்து போலீசில் புகார் கூறாமல் எம்.பி.ரமேஷ் உள்ளிட்டோர் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா, பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜன், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வந்த திமுக எம்.பி.ரமேஷ் 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இந்நிலையில் 2 நாள் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கடலூர் சிறையில் இருந்த எம்.பி.ரமேஷ் கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

சிபிசிஐடி 2 நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்