நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றதா?

தமிழ்நாட்டில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றதா?: உச்ச நீதிமன்றம் கேள்வி..!

நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக 2011ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்படுகிறதா? இல்லையா! என ஆய்வு செய்து ஆறு வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆ

தமிழ்நாட்டில் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறா? என்பது குறித்து ஆறு வார காலத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க 2011ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் செயல்படவில்லை என்றும், இந்த வழக்குகளை வேறொரு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக 2011ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்படுகிறதா? இல்லையா? என ஆய்வு செய்து 6 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Find Us Hereஇங்கே தேடவும்