மாணவர்களின் பழக்க வழக்கங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்களை காப்பாற்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு.

ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

தமிழகத்தில் மாணவர்களின் பழக்க வழக்கங்களை கண்காணிக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "ஆன்லைன் விளையாட்டுகள் அதிகமாகி இருக்கும் நிலையில், மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  

வயது வந்தோருக்கான செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் வந்தால் செல்போன், மடிக்கணிணி ஆகியவற்றை சோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்