இரண்டு நிதி நிறுவனங்களில் ஐடி ரெய்டு: ரூ.300 கோடி வரி ஏய்ப்பு

சென்னையில் இரண்டு நிதி நிறுவனங்களில் ஐடி ரெய்டு: ரூ.300 கோடி வரி ஏய்ப்பு..!

சென்னையில் இரண்டு நிதி நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

சென்னையில் இயங்கி வரும் இரண்டு தனியார் நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் செப்டம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிதி நிறுவனங்கள் அதிக அளவு வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி வசூலித்தது கண்டறியப்பட்டது. இதற்கு முறையாக வரியை செலுத்தாமல் ஏரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. 

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக 35 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. கணக்கில் வராத ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்