உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சியில் பாஜக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சியில் பாஜக தனித்து போட்டி..!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு பாஜக தனித்து போட்டியிடுகின்றன. இதன்படி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான 8 இடங்களிலும், ஒன்றிய குழு உறுப்பினருக்கான 40 இடங்களிலும் பாஜக போட்டியிடவுள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்