தமிழ்நாட்டின் முதல்வர் என்பது பதவியல்ல; பொறுப்பு!.. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதல்வர் என்பது பதவியல்ல; பொறுப்பு!.. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

விவசாய பெருங்குடி மக்களுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு மின் இணைப்பை வழங்கியுள்ளார்.

இத்துவக்கவிழாவில் பேசிய முதல்வர், தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவில்லை எனவும் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டதாகவும், ஆனால் 2011 -16 அதிமுக ஆட்சிகாலத்தில் 82,987 பேருக்கும், 2016-21 காலகட்டத்தில் 1,38,592 பேருக்கு மட்டும்தான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதுதான் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்றார்.

மேற்கொண்டு பேசிய அவர், திருவாரூரில் முதல் சூரிய மின்சக்தி பூங்கா அமையவுள்ளதாக தெரிவித்ததோடு, சூரிய சக்தி மின்சார தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய மின் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, 17,980 மெகா வாட் மின்சாரத்தை வரும் 10 ஆண்டு காலத்தில் தயாரிக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்