இனி டாஸ்மாக்கில் மொத்த விற்பனை கிடையாது.!

இனி டாஸ்மாக்கில் மொத்த விற்பனை கிடையாது.!

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது  டாஸ்மாக் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் விற்பனை குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும், வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்