வங்கித்தேர்வில் EWS பிரிவினருக்கு மட்டும் குறைவான கட்-ஆஃபா?.. – உண்மை நிலை என்ன?

வங்கித்தேர்வில் EWS பிரிவினருக்கு மட்டும் குறைவான கட்-ஆஃபா?.. – உண்மை நிலை என்ன?

பாரத ஸ்டேட் வங்கி நடத்திய எழுத்தர் தேர்வுக்கான பிரிலிம்ஸ் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் மற்ற பிரிவுகளைவிட குறைவாக உள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களுக்கென 10% இடஒதுக்கீடை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. எந்தளவுக்கு இதற்கு  ஆதரவு குரல் எழுப்பப்பட்டதோ, அதைவிட அதிகமாக இது சமூகநீதியை பாழ்ப்படுத்தும் செயல் என எதிர்ப்பு குரல்கள் நாடெங்கும் கிளம்பின.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று வெளிவந்த தமிழ்நாட்டு மாணவர்கள் எழுதியிருந்த எஸ்பிஐ பிரீலிம்ஸ் தேர்வின் முடிவுகளில் கட்-ஆஃப் மதிப்பெண் பொதுப்பிரிவுக்கு 61.75, தாழ்த்தப்பட்டோருக்கு 61.75, பழங்குடியினருக்கு 57.25, ஒபிசி பிரிவினருக்கு 61.75, பொதுப்பிரிவிலிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 47.75 எனவும் வெளியிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழ்நாட்டு ஊடகங்கள்  கேள்விக்கணைகளை தொடுத்திருந்தன.

எனவே, இதன் உண்மைத் தன்மை குறித்து தேர்வு எழுதியிருந்த மாணவர்கள் கூறுகையில், தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பிரீலிம்ஸ் தேர்வு என்பதால், EWS சான்றிதழோடு இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு எனவும், இதன் முதன்மைத்தேர்வு இந்திய அளவில் நடத்தப்படுகையில் இந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணில் மாறுபாடு ஏற்படும் என தெரிவித்தனர்

Find Us Hereஇங்கே தேடவும்