திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது - எடப்பாடி பழனிசாமி!

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது - எடப்பாடி பழனிசாமி!

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். 

 சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ,2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு திட்டம் சிறப்புடையது என்பதால்தான் அதை திமுக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெற்றது என்பது குறித்து தெளிவான விவரம் அரசாங்கத்திடம் இல்லை என்றும் நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்