தலைமைச்செயலகமாக மாறுகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை!

 தலைமைச்செயலகமாக மாறுகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை!

சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் . தலைமைச்செயலக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகம் பழதாகி விட்டதால் புதிய தலைமை செயலகம் கட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முடிவு செய்தார்.2010 ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

இந்நிலையில் 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக கட்சி புதிய சட்டமன்ற கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்து அமைச்சரவையில் தீர்மானம் நிறவேற்றப்பட்டது.

 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.அப்போது புதிய தலைமை செயலக கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவின் போது வைக்கப்பட்ட கல்வெட்டு நீக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் . தலைமைச்செயலக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மறுபடியும் தலைமை செயலகமாக மாற்றப்படுகிறதா என கேள்விகள் எழுப்பப்ட்டுள்ளது.

 

Find Us Hereஇங்கே தேடவும்