6 -8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்படுமா? அறிக்கையை நாளை முதல்வரிடம் சமர்பிக்கிறது பள்ளி கல்வித்துறை!

6 -8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்படுமா?  அறிக்கையை நாளை முதல்வரிடம் சமர்பிக்கிறது பள்ளி கல்வித்துறை!

மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம் என  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 1- 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்ததாக கூறினார்.

மேலும் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனை அறிக்கையை நாளை முதலமைச்சரிடம் சமர்பிக்க உள்ளதாக கூறினார்.

மேலும் பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 1-8 முதல் வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்