தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்; ஆயுள் வரை செல்லும்.!
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்; ஆயுள் வரை செல்லும்.!
இனி வரும் காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என்றும், அதற்குள் பணிக்குச் சேராதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியும் இருந்தது. இதன் காரணமாக, ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் பணி கிடைக்காதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு,ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.