5.1 அளவில் நிலநடுக்கம்: தப்பிப்பிழைத்த சிங்காரச் சென்னை!

5.1 அளவில் நிலநடுக்கம்: தப்பிப்பிழைத்த சிங்காரச் சென்னை!
5.1 அளவில் நிலநடுக்கம்: தப்பிப்பிழைத்த சிங்காரச் சென்னை!

சென்னை – ஆந்திரா நிலப்பரப்பை ஒட்டிய வங்கக்கடலில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

சென்னை – ஆந்திரா  நிலப்பரப்பை  ஒட்டிய வங்கக்கடலில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கம், காக்கிநாடாவிற்கு கிழக்கே 296 கி.மீ தூரத்தில், சுமார் 10 கி.மீ கடல் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது, வங்கக் கடலில் சரியாக 12.35 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னைக்கு வடகிழக்காக சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், நடுக்கடலில்  ஏற்பட்டதால் சென்னையில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், இந்நிலநடுக்கம்  நிலப்பகுதியில் ஏற்பட்டிருந்தால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என ஊகித்து, தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், தியாகராயர் நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் குடியிருப்போர் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக   தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் தற்போதைக்கு வங்கக்கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சென்னைக்கு மிக அருகில் நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பது அண்மைக் காலங்களில் இதுவே முதன்முறை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com