பிரதிபலனின்றி பணி செய்யும் ஊராட்சி மன்றத் தலைவர்களை கவனத்தில் கொண்டு, மாதந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளார் அமைச்சர்
பிரதிபலனின்றி பணி செய்யும் ஊராட்சி மன்றத் தலைவர்களை கவனத்தில் கொண்டு, மாதந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளார் அமைச்சர் பெரிய கருப்பன்.
கடந்த 13-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் இம்முறை முதன்முறையாக வேளாண் துறைக்கென்று பிரத்யேக பட்ஜெட் கடந்த 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மானிய கோரிக்கைகள் மீதான விவதாங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடந்தது, அதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகளின் படி, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.1,000 மாக வழங்கப்பட்ட மாதாந்திர மதிப்பூதியம் ரூ 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார்
மேலும், ஊரக மற்றும் நகரப் பகுதிகளுக்கான தேர்தல்கள் முடிவடைந்தவுடன் மாவட்ட திட்டக்குழுக்கள் அமைக்கப்படும் என்றும், சுகாதாரத்தில் சிறப்பாக செயலாற்றும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும், அத்துடன் சிறப்பான செயல் நோக்கோடு இயங்கும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கைக்கான விவாதத்தில் அத்துறைக்கான அமைச்சர் பெரிய கருப்பன் இதுபோன்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.