தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை புறநகரில் உள்ள, தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து,மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது அந்தபகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. பெரும்பாலான புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு, தாம்பரம் நுழைவாயிலாக இருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதே தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படுவதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனாகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.