வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ஏன் தடை விதிக்க கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ஏன் தடை விதிக்க கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இச்சட்டத்துக்கு எதிரான வழக்குகளை, ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது? என்ற கேள்விக்கு தமிழக அரசு நாளை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மனுவில் "வழக்கு நிலுவையில் உள்ளபோதே சட்டத்தின் கீழ் நியமனங்கள் நடைபெறுவதால் தடைவிதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் தடைவிதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு தரப்பிலிருந்து விவாதம் வைக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.