விடுபட்டுப்போன உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் தேதி!!!

விடுபட்டுப்போன உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் தேதி!!!
விடுபட்டுப்போன உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் தேதி!!!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிரிக்கப்பட்டதாலும், பிரிவினைக்குள்ளானதாலும் வார்டு மறுவரையறைக்குள்ளான  9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததையொட்டி, வெகுவிரைவில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகே, நாகை மாவட்டம்  பிரிக்கப்பட்டு, மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக  நடைபெறவுள்ள  உள்ளாட்சி தேர்தலோடு, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது என உள்ளாட்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com