தமிழ்நாடு பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அறிவிப்பு
இணையத்தில் தன்னைப் பற்றிய வீடியோ வெளியானதை தொடர்ந்து பாஜக பொதுச் செயலாளர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக வழக்கறிஞரும் பாஜக மூத்த தலைவருமான கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் வீடியோ கால் பேசிக் கொண்டே பூஜையறையில் அமர்ந்து சுய இன்பம் செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தான் பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் கே.டி.ராகவன்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்... என்னை சார்ந்தவர்களுக்கு நான் யார் என்று தெரியும்... நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனுமின்றி பணியாற்றி வருகிறேன்.. இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்" என்று தெரிவித்துள்ளார்.