அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி!
புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் நீக்கிவிட்டு கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.இதனால் புகழேந்தி எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் அவர், தன்னை அதிமுகவிலிருந்து நீக்கி அறிக்கை விட்டதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிறந்திருந்த நிலையில் செப்டம்பர் 14-ம் தேதி இருவரும் ஆஜராக நீதிபதி அலீசியா உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் , ஆகஸ்ட் 24 ம் தேதி இருவரையும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது .
இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதால் வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.