பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழக்கும் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை
பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழக்கும் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை என சட்டப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனத்தை மானிய விலையில் வழங்கும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழக்கும் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை என சட்டப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
"இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு எதுவும் வரவில்லை என்றும், பெண்கள் அனைவருக்கும் பேருந்தில் இலவச பயண திட்டத்தை அரசு அறிவித்து நடைமுறையில் உள்ளது" எனவும் அவர் கூறியுள்ளார்.
பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்' 2021-22ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.