“PRESS”, “On Govt Duty” வாகனங்களுக்கு இனி கிடுக்குப்பிடி!!!

“PRESS”, “On Govt Duty” வாகனங்களுக்கு இனி கிடுக்குப்பிடி!!!
“PRESS”, “On Govt Duty” வாகனங்களுக்கு இனி கிடுக்குப்பிடி!!!

தன் உரிமைதாரின் பணி அந்தஸ்தை ஸ்டிக்கரின் மூலம் பிரதிபலித்து வரும் வாகனங்களை சோதனையிட உத்தரவு

காவல் துறை சோதனை சாவடிகளில் ‘G’ அல்லது ’அ’ போன்று தன் உரிமைதாரின் பணி அந்தஸ்தை ஸ்டிக்கரின் மூலம்  பிரதிபலித்து வரும் வாகனங்களை சோதனையிட காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு காவல்துறை மேலிடம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘G’, ’அ’, ‘PRESS’, ’Lawyer’, On Govt. Duty மற்றும்  ’Human Rights’ போன்ற ஸ்டிக்கர்களோடு சோதனை சாவடியை கடக்கும் வாகனங்களை நிறுத்தி பாரபட்சமின்றி சோதனையிடவும், சோதனைக்கு ஒத்துழைக்க மறுக்கும் நபர்கள் மீது வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சோதனையிடும் வாகனங்களின் விவரங்களான S.No., Date & Time, Vehicle Registration No., User name, Address, Cell No., Office address, Designation, From, To, Vahan app details ஆகியவற்றை பதிவு செய்து, தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் இலட்சிணைகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களும் தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com