தமிழ்நாடு
55 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்
55 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்: மா.சுப்பிரமணியன்
55 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்
தமிழகத்தில் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் 55 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 2.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையாக நேற்று ஒரே நாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இன்று தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.