ரூ.39 கோடி செலவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.39 கோடி செலவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ரூ.39 கோடி செலவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மெரினா காமராஜர் சாலையில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் 2.21 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் 2.21 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சட்டப்பேரவையின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்னை மெரினா காமராஜர் சாலையில் ரூ.39 கோடியில் 2.21 ஏக்கரில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

மேலும் அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

"மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றும், கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக அவரின் வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை இந்த தலைமுறையினரும் அறியும் வகையில் விளக்க படங்களுடன் நினைவிடம் இருக்கும்" என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com