தமிழ்நாடு
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி (இன்று) வரை www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 4ஆம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.