தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. அப்போது 2021-22ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. அப்போது 2021-22ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்முறையாக நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் அடுத்த வாரத்தில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு குறித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை பற்றியும், ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் சட்டம் பற்றியும் விவாதம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.