கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளையும், கல்லூரிகளையும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பது கட்டாயம் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.