தமிழ்நாடு
மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி உள்ளிட்டவைகளை செலுத்த ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மோட்டார் வாகனங்களுக்கான வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.