தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் மீதான வரியை குறைப்பதாக அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரோல் மீதான வரியை குறைப்பதாக அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 14-ம் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.
அதையடுத்து தொடர்ந்து விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ஒரு வாரத்துக்கு பின், தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைத்துள்ளன.
இதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நேற்று டீசல் லிட்டருக்கு ரூ.93.66-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ. 99.20-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ. 93.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.