ரேசனில் 30 நாட்களும் பொருட்கள் வழங்கப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டவட்டம்!

ரேசனில் 30 நாட்களும் பொருட்கள் வழங்கப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி  திட்டவட்டம்!

தமிழகத்தில் மாதம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நியாய விலை கடையில், திடீரென, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, நியாய விலைக் கடைகளில் உள்ள ஆவணங்களையும் பயோ மெட்ரிக் கருவியையும், அவர் ஆய்வு செய்தார். 

பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் அவர் கூறும் போது,தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் காலியாக உள்ள கடை ஊழியர்களின் பணி நிரப்பப்படும் என்றும்  ரேசன் கடைகளில் மாதம் 30 நாட்களும் மக்களுக்குப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்