தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் அடுத்த மாதம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் சர்க்கரை, ரத்தகொதிப்பு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும் என்றும், ஆதன் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்