தமிழகம் முழுவதும் ஏழை, எளிய,மக்களின்‌ வாழ்வாதாரம்‌ மேம்பட திட்டம் -முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம் முழுவதும் ஏழை, எளிய,மக்களின்‌ வாழ்வாதாரம்‌ மேம்பட திட்டம் -முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என்று  முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், திட்டங்களை வகுத்து அதன் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்கு சென்றைடையும் வகையில் திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செய்லபடுத்த வேண்டும் என்றும் மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட முதல்வர், மாநிலத்திற்கான பிரத்யேகமாக நிகழ்த்தரவு (Real Time Data) ஒன்றை நிறுவ வேண்டும். ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ் மாற்றங்களுக்கு ஏற்ப தொலைநோக்கு திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்