காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1,970 சதுர அடி ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை அறநிலையத்துறை  மீட்டது. 

கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி மதிப்பிலான 1,970 சதுர அடி நிலம், கடந்த 2014 ஆண்டுமுதல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டு 9 கடைகள் செயல் பட்டுவந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக அறநிலையத்துறைக்கு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார்.
 
இதுதொடர்பாக அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கடைக்காரர்கள் காலி செய்யாததால் கடைகள் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படுவதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டார்.

மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்