நடுரோட்டில் உயிருக்கு போராடிய இளைஞர்: உயிரை காப்பாற்றிய அமைச்சர்!

நடுரோட்டில் உயிருக்கு போராடிய இளைஞர்: உயிரை காப்பாற்றிய அமைச்சர்!

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞரை, அமைச்சர் மா.சுப்ரமணியன் தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்விற்காக அமைச்சர் மா.சுப்ரமணியன் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கார் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை அவ்வழியாக சென்ற அமைச்சர் கவனித்து காரை நிறுத்தி ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் அவரது காரில் ஏற்றிக் கொண்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். 

இதையடுத்து விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் சற்று முன்னேற்றம் அடைந்தவுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.இந்த வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்