முன்னாள் அமைச்சர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.!

முன்னாள் அமைச்சர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்தார். இந்நிலையிலை கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார். 

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். 

அதில் கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்