இன்று முதல் +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.!

இன்று முதல் +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.!

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எண்று பள்ளிகல்விதுறை அறிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை பட்டியலை www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in  இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை எனக் கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதிக் கொள்ளவும் அரசு அனுமதித்துள்ளது. 

இது போன்ற மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 வை தொடர்ந்து 10ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களும் விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்