தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய நீலகிரி, கோயமுத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல ஜூலை 24ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜூலை 25ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்" எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்