சென்னையிலுள்ள கடை ஒன்றில் 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிற நிகழ்வு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையிலுள்ள கடை ஒன்றில் 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிற நிகழ்வு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர்.பெட்ரோல் விலை அதிகரிப்பை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையிலுள்ள பிரியாணி கடை ஒன்றில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. சென்னையிலுள்ள தொப்பி வாப்பா பிரியாணி எனும் கடையில் பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நடைமுறை கடைபிடிக்க பட்டு வருகிறது. மேலும் 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த டோக்கனை கொடுத்து அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கும்படி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.