உப்பு நீரில் இறங்க தயங்கிய அமைச்சரை அசால்டாக தூக்கி சென்ற தொண்டர்கள்.!

உப்பு நீரில் இறங்க தயங்கிய அமைச்சரை அசால்டாக தூக்கி சென்ற தொண்டர்கள்.!
உப்பு நீரில் இறங்க தயங்கிய அமைச்சரை அசால்டாக தூக்கி சென்ற தொண்டர்கள்.!

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் ஆய்விற்காக சென்ற போது உப்பு நீரில் கால் வைத்து இறங்க தயங்கியதால் அவரை தொண்டர்கள் தூக்கி சென்றது பெரும் பேசுப் பொருளாகிய

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் ஆய்விற்காக சென்ற போது உப்பு நீரில் கால் வைத்து இறங்க தயங்கியதால் அவரை தொண்டர்கள் தூக்கி சென்றது பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுக்களால் மீனவர்களுக்கு பாதிக்கப்பட்டு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை அதிகாரிகளுடன் படகில் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வு முடிந்த பின் படகில் பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதிக்கு வந்தனர்.

அப்போது படகு நிறுத்தப்பட்ட இடத்தில் நீர் மற்றும் சேறும் சகதியுமாக இருந்தது. அதில் இறங்கினால் தன் வெள்ளை நிற ஷூ அழுக்காகி விடும் என்று அமைச்சர் படகில் இருந்து இறங்க தயங்கினார். இதனை தொடர்ந்து அவர் தொண்டர்களிடன் தன்னை துாக்கி செல்லும்படி தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அப்பகுதி தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஒருவரின் கணவர் மீன்வளத்துறை அமைச்சரை துாக்கி வந்து கரையில் சேர்த்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ''என்னை துாக்கி செல்லுங்கள் என யாரிடமும் கூறவில்லை. அன்பு மிகுதியால் மீனவர்களே என்னை துாக்கிச் சென்றனர். அங்கு என்ன நடந்தது என்பதை மீனவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னை மீனவர்கள் முத்தமிட்டனர்; கட்டிப்பிடித்தனர்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com