சாஜ் சென்டர்கள் நடத்த இனி கடுமையான விதிகள் இருக்கும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மசாஜ் சென்டர்கள் நடத்த இனி கடுமையான விதிகள் இருக்கும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசாஜ் என்கிற பெயரில் விபசாரமும் அதிகரித்து வருகிறது. முறையான அனுமதியின்றி மசாஜ் சென்டர்களை யாருக்கும் தெரியாமல் தொடங்கிவிடுகின்றனர். அவ்வாறு தொடங்கிய மசாஜ் சென்டர்கள் அடுக்குமாடியில் ஒரு வீட்டை எடுத்து நடத்துகின்றனர். இதனால் இது வெளி உலகுக்கு தெரிவது கிடையாது. இதனால் விவசாரம் தாராளமாயமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் , தமிழகத்தில் உள்ள மசாஜ் சென்டர்கள் வருகிற ஜூன் மாதம் முதல் மாநில அரசின் உரிமம் பெற்றுதான் செயல்பட வேண்டும்.
மேலும் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை மசாஜ் சென்டரின் உரிமையாளர் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் உரிமம் இன்றி மறைமுகமாக நடக்கும் மசாஜ் சென்டர்கள் கலக்கத்தில் உள்ளன.