பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகம் மாறனும்

பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகம் மாறனும்

பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம்.

அனைத்து வகையான பேரிடர்களையும் எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் புயல் பாதிப்பினால் தமிழகத்தின் பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழலே இருக்கின்றன. தற்போது, புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனைத்து வகை பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், "அரசின் நோக்கத்தை செயல்படுத்த மாவட்ட, மாநில அளவில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்றி கரைகளை பலப்படுத்த நிரந்தர திட்டத்தை உருவாக்க வேண்டும்.
பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும். எச்சரிக்கை தகவல் திட்டம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com