பஸ் ஓட்டி மாஸ் காட்டிய அமைச்சர்: கைத்தட்டி உற்சாகப்படுத்திய மக்கள்!

பஸ் ஓட்டி மாஸ் காட்டிய அமைச்சர்: கைத்தட்டி உற்சாகப்படுத்திய மக்கள்!
பஸ் ஓட்டி மாஸ் காட்டிய அமைச்சர்: கைத்தட்டி உற்சாகப்படுத்திய மக்கள்!

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி - ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை ஓட்டி, இயக்கி வைத்தார்.இந்த சம்பவம் பார்ப்போரை கவரும் விதமாக இருந்

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி - ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை ஓட்டி, இயக்கி வைத்தார்.இந்த சம்பவம் பார்ப்போரை கவரும் விதமாக இருந்தது.
அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி, உடையார்பாளையம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் சென்று வரும் வகையில், கூடுதல் அரசு பேருந்தை இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொடங்கிவைத்து, பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைத்தட்டி அவரை  உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com