வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறி வருகிறார். இந்நிலையில், வீட்டு சிறையில் கருணாநிதியை அடைத்து வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமி பேசி இருக்கிறார்.
திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியை கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது ஸ்டாலின் தான் என்றும் அவர் கூறியுள்ளார். அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று இருக்கலாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.