பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு: சைக்கிள் ஓட்டி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்த பிரேமலதா!

பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு: சைக்கிள் ஓட்டி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்த பிரேமலதா!
பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு: சைக்கிள் ஓட்டி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்த பிரேமலதா!

பாரிமுனையில் சைக்கிளில் சென்று பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரிமுனையில் சைக்கிளில் சென்று பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் தொடர்பாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர். 
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் டேக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே பெட்ரோல், டீசல் அதிகமான விலைக்கு விற்பதில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது, இதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com