நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக இளைஞரணி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்..
நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் இயற்றி இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் க்கத்தில் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவுக்கு கண்டனம் தெரிவித்த ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சூர்யாவை தொடர்ந்து கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன், பூச்சி முருகன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்பட பலர் புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். ஏற்கனவே நடிகர் சூர்யா மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நீட்தேர்வு உள்பட பல திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் நீட்தேர்வு மற்றும் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.