தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வேண்டுமா? இதோ முழு விவரம்!

தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வேண்டுமா? இதோ முழு விவரம்!
தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வேண்டுமா? இதோ முழு விவரம்!

தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.

தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 8,446 தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களில் சேர https://t.co/EjjzZfEuwx
என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள்  தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசமாக படிக்க ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் மாணவரின் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இலவசமாக கல்வி கற்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் இல்லம், பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி வரை மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.இதில் நர்சரி, பிரைமரி பள்ளிகளும்  அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com