உடலில் டேப் போட்டு ஒட்டி மதுபாட்டில்களை கடத்திய இளைஞர்கள்! வசமாக மாட்டியது எப்படி?

உடலில் டேப் போட்டு ஒட்டி மதுபாட்டில்களை கடத்திய இளைஞர்கள்! வசமாக மாட்டியது எப்படி?
உடலில் டேப் போட்டு ஒட்டி மதுபாட்டில்களை கடத்திய இளைஞர்கள்! வசமாக மாட்டியது எப்படி?

இளைஞர் ஒருவர் மதுபாட்டில்களை உடலில் கட்டி மறைத்து வைத்து எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர்  மதுபாட்டில்களை உடலில் கட்டி  மறைத்து வைத்து எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இரண்டு இளைஞர்கள் உடலில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து பாட்டில்களை கடத்தி உள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டது இதனால் திருவாரூர் மாவட்டத்தில் மது கிடைக்கவில்லை. ஆனால் திருவாரூர் நாகை மாவட்டத்திங்களுக்கு அருகில் உள்ள காரைக்காலில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
 பாண்டிச்சேரி மாநிலமான காரைக்காலில் மதுபாட்டில்கள் விலை குறைவு அங்கிருந்து மதுபாட்டில்கள் கடத்திவரப்ப்பட்டு திருத்துறைப்பூண்டி பகுதிகளில் கள்ள சந்தையில் விற்கபடுவதாக வந்த தகவல் வந்தது .அதன் பேரில்,  போலீசார் பல பகுதிகளில் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரு இளைஞர்கள் சந்தேகத்திற்கு உள்ளாகும் விதமாக  இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களை மறித்து சோதனையிட்ட போது நூதன முறையில், அவர்கள் உடலில் பார்சலில் ஓட்டப்படும் டேப் மூலம் உடலில் 48 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. 
அந்த இரண்டு இளைஞர்கள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள களப்பால் பகுதியை சேர்ந்த ரமேஷ், மனோகர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com